mvc

சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி

கால்நடை நுண்ணுயிரியியல் துறை


கால்நடை நுண்ணுயிரியியல் தொடர்பான பாடங்கள் 1904-ஆம் ஆண்டு முதல் கால்நடை மருத்துவ மாணாக்கர்களுக்கு கற்பிக்கப்பட்டு வருகிறது.

குறிக்கோள்

  • கால்நடை மற்றும் பறவையினங்களைத் தாக்கும் நுண்ணுயிரி நோய்களைக் கண்டறிதல் மற்றும் கட்டுப்படுத்துதல் குறித்த அறிவை புகட்டுதல், அதற்கான நிலையான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளுதல் மற்றும் விரிவாக்கக் கல்வித் திட்டங்களைச் செயல்படுத்துதல்

கல்வி

இளங்கலை மாணவர்களுக்கு கால்நடை நுண்ணுயிரியல் பிரிவில் (3 + 2) கோட்பாடு மற்றும் செய்முறை வகுப்புகள் கால்நடைநுண்ணுயிரியலில் முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகள் முறையே 1958 மற்றும் 1977 ஆண்டிகளிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது

ஆராய்ச்சி

கால்நடை நுண்ணுயிரியல் தொடர்பான ஆராய்ச்சிகளுக்கான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் துறையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு பன்னாட்டு மற்றும் உள்நாட்டு நிதி முகவைகளின் உதவியுடன் பல்வேறு ஆராய்ச்சித்திட்டங்கள் இத்துறையில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

உட்கட்டமைப்புவசதிகள்

  • மாணவர்களின் மென்திறனை மேம்படுத்தும் பொருட்டு தலா ஒரு மென்திறன் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.
  • மாட்டின் தொடு உணர்வியல் பொறியன், கால்நடை ஒப்புருவாக்கி பொறியன், நாயின் மாதிரி அறுவை சிகிச்சை பொறியன், உடற்கூறியல் பொறியன் ஆகிய நான்கு பொறியன் வழிகற்றல் நிலையங்கள், கற்றல் மற்றும் மதிப்பீட்டு மையத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

துறையிலுள்ளமுக்கியமானசாதனங்கள்

  • வகுப்பு III & II - உயிரியற் பாதுகாப்புப் பெட்டக அமைப்புகள்
  • பல்படியாக்க தொடர்வினைக் கருவிகள்
  • எலிசா நிறமாலை ஒளிமானி
  • மின்னாற் பகுப்பு சாதனங்கள்
  • உறைநிலை உலர வைத்தல் கருவி
  • அதிமைய விலகு பிரிப்புக் கருவி
  • நுண்ணோக்கிகள்
  • வெப்ப அடைக்காப்பான்கள்

குறிப்பிடத் தக்க சாதனைகள்

  • உயர் வெப்பத்தினால் பாதிப்படையாத வெள்ளைக் கழிச்சல் நச்சுயிரி தடுப்பூசி உருவாக்கப்பட்டு தரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொழிற்நுட்பம் சுகுனா குழுமத்தின் குலோபயான் நிறுவனத்திற்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  • வெள்ளைக்கழிச்சல் நோய்க்கான குருணைத் தடுப்பூசி தயாரிப்பதற்கான தொழிற்நுட்பம் கண்டறியப்பட்டு நிலைப்படுத்த பட்டுள்ளது.
  • கோழி அம்மைக்கான தடுப்பூசி தொழிற்நுட்பம், சீர்மைப் படுத்தப்பட்டு கால்நடை நோய்த்தடுப்பு மருத்துவ நிலையத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது
  • கோழிகளைத் தாக்கும் மைக்கோபிளாஸ்மா இன பாக்டீரியாக்களைக் கண்டறிய பல்கூட்டு பல்படியாக்க தொடர்வினை உருவாக்கப்பட்டுள்ளது.
  • கோலிஃபாம் மடி நோய்க்கான தடுப்பூசி செயலிழக்கம் முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது

வல்லுநர்கள்

  • கு. சோபா, பேராசிரியர், பேராசிரியர் மற்றும் தலைவர்
  • பெ. சாமுவேல் மாசிலாமணி ரொனால்டு, பேராசிரியர்
  • எ. ரமேஷ், பேராசிரியர்
  • ச .ராஜலெட்சுமி @ ராதாபாய், உதவிப் பேராசிரியர்
  • கோ. இளையராஜா, உதவிப் பேராசிரியர்

தொடர்புக்கு:

பேராசிரியர் மற்றும் தலைவர்

கால்நடை நுண்ணுயிரியல் துறை,

சென்னைக் கால்நடை மருத்துவக் கல்லூரி,

வெப்பேரி, சென்னை – 600 007

தொலைபேசி: +91-44-25304000-2054

தொலைப்படி: +91-44-25362787 & +91-44-25388997

மின்னஞ்சல்: hodvmcmvc@tanuvas.org.in