சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி

வரலாறு

1903 ஆம் ஆண்டு சென்னை சைதாப்பேட்டையில் தற்காலிக அமைப்பில் ஐந்து மாணவர்களுடன் குதிரை சிகிச்சைப் பள்ளியாக சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. உழவியலுக்கான ராயல் கமிஷனின் பரிந்துரையின் அடிப்படையில் கால்நடை மருத்துவத்தில் பட்டம் வழங்க கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது. இக்கல்லூரி இந்தியாவில் தொடங்கப்பட்ட நான்காவது கால்நடை மருத்துவ நிறுவனமாக இருந்தாலும், 1935- ல் ஒரு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட நாட்டின் முதல் கால்நடை மருத்துவக் கல்லூரியாகும். சென்னை சென்ட்ரல் அருகே வேப்பேரியில் 6 ஹெக்டேர் பரப்பளவில் கல்லூரி அமைந்துள்ளது. இதன் நிர்வாக கட்டிடம் இந்தோ-சராசெனிக் கட்டிடக் கலையில் கட்டப்பட்ட ஒரு பாரம்பரிய அமைப்பாகும், இக்கல்லூரியில் 31 துறைகள் இளங்கலை கால்நடை மருத்துவம் கற்பத்தலுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 22 துறைகளில் முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.

  • 1903 - சைதாப்பேட்டை, சென்னையில் 3 வருட பட்டயபடிப்பு தொடங்கப்பட்டது
  • 1935 - பி.வி.எஸ்சி பட்டப்படிப்பு தொடங்கப்பட்டு சென்னை பல்கலைக்கழகத்துடன் இனைக்கப்பட்டது
  • 1958 - முதுநிலைக் கல்வி மற்றும் ஆரய்ச்சிக்காக தென்மண்டல மையமாக மேம்படுத்த்ப்பட்டது
  • 1960 - முதுநிலை பட்டப்படிப்பு தொடக்கம்
  • 1976 - தமிழ்நாடு வேளாண்மை அறிவியல் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டது
  • 1989 – தமிழ்நாடு மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது