mvc

சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி

விலங்கின மரபியல் மற்றும் இனவிருத்தித் துறை


விலங்கின மரபியல் மற்றும் இனவிருத்தித்துறை, சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் 1949 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பழமையான துறைகளில் ஒன்றாகும். இத்துறையில் எம்.வி.எஸ்ஸி பட்டப்படிப்பு, 1957 ஆம் வருடமும், பிஎச்.டி பட்டப்படிப்பு 1978 ஆம் வருடமும் தொடங்கப்பட்டன. சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில், இத்துறையில்தான் பிஎச்.டி பட்டப்படிப்பு முதன் முதலாக சென்னை பல்கலைக்கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்டது.

குறிக்கோள்

  • விலங்கின மரபியல் மற்றும் இனவிருத்தி சார்ந்த கல்வியினை இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு வழங்குதல்
  • உள்நாட்டின விலங்கினங்களையும், பறவையினங்களையும் மூலக்கூறு அளவில் வரையறை செய்தல் மற்றும் பாதுகாத்தல்
  • நாட்டில் உள்ள விலங்கினங்களின் இனவிருத்தி முறைக்கான கொள்கை வரைவினை தயார் செய்தல்
  • விலங்கின இனவிருத்தி, செல்மரபியல், மூலக்கூறு மரபியல் மற்றும் செயற்கை இனவிருத்தி ஆகிய பிரிவுகளில் மனிதவள மேம்பாட்டை பெருக்குவது
  • பண்ணையாளர்களுக்குப் பயிற்சி மற்றும் அறிவுரைகளை வழங்கி அவர்கள் தேவைகளைப் பூர்த்தி செய்தல்

உறைவிந்து வங்கி

பொலிகிடாபராமரிப்பு, விந்து சேகரிப்பு, உறைவிந்து உற்பத்தி, மற்றும் திரவநைட்ரஜன் உற்பத்திக்குத் தேவையான உபகரணங்களைக் கொண்டுள்ளது.

செயல்பாடுகள்

கல்வி

  • (i) இளங்கலை பட்டப்படிப்பு: பி.வி.எஸ்ஸி.&ஏ.எச். பட்டப்படிப்பிற்கான பாடத்திட்டங்கள்
  • (ii) முதுகலை பட்டப்படிப்பு
  • (iii) முனைவர் பட்டப்படிப்பு

ஆராய்ச்சி

விலங்கின இனவிருத்தி / அளவு சார்ந்த மரபியல்

  • மேயர் ஸ்ட்ரெய்ன்’ என்ற முட்டை கோழியினம் உருவாக்கம்
  • சான்டினோ’ என்ற மெல்லிய கம்பள உற்பத்தி செய்யும் கலப்பின செம்மறி ஆட்டினம் உருவாக்கம்

செயற்கை இனவிருத்தி

  • 1973 ஆம் ஆண்டு, தமிழ்நாட்டில் முதல் முறையாக உறைவிந்து தொழில்நட்பத்தை அறிமுகம் செய்தது.
  • ஜெர்ஸி கலப்பினங்கள் மற்றும் ஹோல்ஸ்டீன்-பீரிஸியன் கலப்பின பொலிகாளைகளின் விந்து உற்பத்திப் பண்புகளை மரபியல் பகுப்பாய்வு செய்தது.

செல் மரபியல்

  • மாடு, எருமை, குதிரை, செம்மறியாடு, வெள்ளாடு, நாய், பன்றி, முயல், கோழி, காடை மற்றும் வன விலங்குகளில் குரோமோசோம்களின் ஆய்வு.
  • ஜெர்ஸி மாட்டினத்தில், குரோமோசோம் பகுப்பாய்வின் மூலம் இராபர்ட்ஸோனியன் உள்நிலை புல பெயர்ச்சி நடந்ததை அறிந்தது.

உயிர் வேதியியல் மரபியல்

  • கால்நடை இனங்களின் இரத்தத்தில் உள்ள பொட்டாசியம், இரத்த சிவப்பணு, ஆல்புமின் மற்றும் டிரான்ஸ்பரின் ஆகியவற்றில் பல்உருவாக்க மரபியல் ஆய்வுகள்.
  • செம்மறி ஆடு, கோழி மற்றும் முயலினங்களில் ஆல்கலின் பாஸ்படேஸ், எஸ்டரேஸஸ் மற்றும் குளுட்டோதயோன் நொதிகளின் மாறுபாடு அளவீடுகளை வளர்ச்சி பண்புகளுடன் தொடர்புபடுத்தி ஆய்வு.

மூலக்கூறு மரபியல்

  • BMP15 மரபணுவானது நீலகிரி வகை செம்மறி ஆட்டின் இனவிருத்திக்கு குறிப்பான் ஆக கண்டறிவு.
  • மூலக்கூறு மரபியல் தொழில்நுட்பத்தைக் கொண்டு நெருப்புகோழி மற்றும் ஈமு பறவைகளில் பாலினத்தை அறியும் முறை.

வழங்கப்படும் சேவைகள்

  • உற்பத்தி செய்யப்பட்ட உறைவிந்துகளுக்கு தர உத்திரவாதம் அளித்தல்
  • மற்ற துறைகளுக்கு திரவ நைட்ரஜன் வழங்குவதன் மூலம் செல், செல்லைன் மற்றும் உயிர்செல்களைப் பாதுகாத்தல்
  • மாடுகளில் மரபுத்திரி கோளாறுகளை செல் மரபியல் தொழில்நுட்பம் மூலம் கண்டறிதல்
  • மாட்டினங்களில் சந்ததி சரிபார்த்தல்
  • செம்மறி ஆடுகளில் FecB பிறழ்வுபற்றிய பரிசோதனை
  • BLAD, BC, DUMPS மற்றும் FXI போன்ற மரபுசார் கோளாறுகளை மாடுகளில் மூலக்கூறு மரபியல் முறைப்படி கண்டறிதல்

நானோட்ராப்

திரவ நைட்ரஜன் உபகரணம்

மூலக்கூறு உருவகமானி (கெமிடாக் XRS)

தானியங்கி குரோமோசோம் பகுப்பாய்வுமானி

குளிரூட்டப்பட்ட மையவிலக்கி பகுப்பாய்வுமானி

ஆசிரியர்களின் விவரங்கள்

ஆசிரியர் பெயர் வகிக்கும் பதவி மின்னஞ்சல் கைபேசி#
முனைவர் ஆர்.ராஜேந்திரன் பேராசிரியர் மற்றும் தலைவர் rajendran.r@tanuvas.ac.in +91-9884159547
முனைவர். ச.மு.க. கார்த்திகேயன் பேராசிரியர் karthickeyan.s.m.k@ tanuvas.ac.in +91-9791103976
முனைவர். ஆர். தியாகராஜன் பேராசிரியர் thiagarajan.r@tanuvas.ac.in +91-9865379907
முனைவர் அ. கோபிநாதன் பேராசிரியர் gopinathan.a@tanuvas.ac.in +91-9444723316

பேராசிரியர் மற்றும் தலைவர்,
விலங்கின மரபியல் மற்றும் இனவிருத்தித் துறை,
சென்னைக் கால்நடை மருத்துவக் கல்லூரி,
சென்னை – 600 007.
தொலைபேசி: +91-44-25304000 விரிவு 2039
மின்னஞ்சல்: hodagbmvc@tanuvas.org.in