mvc

சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி

உயிர் நுட்பத்தகவல் மையம்


இம்மையத்தின் பிரதான நோக்கம், உயிர் நுட்பத் தகவலியலில் சமீபத்திய வளர்ச்சி மட்டுமல்லாது, கல்வி சார்ந்த செயல்பாடுகள், பயிற்சி வகுப்புகள் நடத்துவது, தரவுத்தளங்களை உருவாக்குதல்

செயல்பாடுகள்

  • உயிர் நுட்பத்தகவலியலின் பல்வேறு பிரிவுகளில் இப்பல்கலைக்கழக / பிற கல்வி நிறுவன ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு பயிற்சி முகாம்களும், கல்லூரியின் முதுநிலை மாணவர்களுக்குத் தகவல் மீட்பு சேவையில் ஒருநாள் பயிற்சி முகாம் நடத்துதல்
  • தரவுத்தளங்கள் மற்றும் வலைதளங்களை உருவாக்குதல்
  • நிகழ்நிலை / தேக்கநிலை இலக்கிய மற்றும் தகவல் மீட்பு சேவைகளை கட்டண அடிப்படையில் வழங்குதல்

உள்கட்டமைப்புவசதிகள்

கணினி வசதிகள்

உயர்ரக கணினி சேவையகம், கணினி சேவையகம் (HPE-2U Rack), 42 கணினிகள், அச்சுப்பொறி ஒளி வருடி மற்றும் கணினி ஒளியூடுருவி படம் காட்டும் கருவிகளோடு கூடிய கருத்தரங்கம்.

உயிர் நுட்பத் தகவல் மென்பொறி வசதிகள்

டி.என்.ஏ. ஸ்டார், லேசர்ஜீன், ஜெனிசிஸ்புரோ, எக்ஸோம், மரபணு ஆய்வு மென்பொறிகள் மற்றும் டிஸ்கவரி ஸ்டூடியோ (பதிப்பு 2020) உயிர்மூலக்கூறுகளுக்கு இடையேயான வினையாக்கத் தினை திறனாய்வு செய்யும் மென்பொறி.

சேவைகள்

உடன் நிகழ் தகவல் மீட்பு சேவை

முதுநிலை மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு தேவையான விஞ்ஞான ஆராய்ச்சித் தகவல்களை 1 ஜிகாபைட் தனிப்பயன் இணையதள வசதியினை பயன்படுத்தி, உடன்நிகழ் தகவல்களை மீட்டுக் கொடுத்தல்.

மென்தட்டு தகவல் கோர்வை தகவல் மீட்பு சேவை

மையத்தின் தேக்கத் தகவல் மீட்பு சேவை விஞ்ஞானிகள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டுவருகிறது. இதன் மூலம் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்/ விஞ்ஞானிகளும் ஆராய்ச்சித் தகவல்களின் சுருக்கப் பதிவினைப் பெற்றுபயன் பெறுகின்றனர்.

பயிற்சி வகுப்புகள்

உயிர் நுட்பத் தகவலியலில் புதிய பரிமாணங்கள், உயரிய தொழில்நுட்பங்கள் குறித்து பல்வேறு பயிற்சி வகுப்புகள் / பட்டறைகள் நடத்தப்பட்டு ஆராய்ச்சி மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலுமிருந்தும் கலந்து கொண்டு பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.

வல்லுநர்கள்

  • ப. தேவேந்திரன், பேராசிரியர் மற்றும் தலைவர்

தொடர்புக்கு:

பேராசிரியர் மற்றும் தலைவர்

உயிர் நுட்பத் தகவல் மையம்,

சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி,

சென்னை-600 007

தொலைபேசி: +91-44-25304000- 2094

தொலைப்படி: +91-44-25360106

மின்னஞ்சல்: hodbitmvc@tanuvas.org.in

இணையதளம் : www.btismvc.ac.in