mvc

சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி

கால்நடை உயிர்வேதியியல் துறை


கால்நடை அறிவியலில் பட்டம் பெறுவதற்கு UG பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக உயிர்வேதியியல் பாடம் கற்பிக்கப்படுகிறது. 1981 வரை, உயிர்வேதியியல் பாடமானது நுண்ணுயிரியல் துறைப் பாடத்துடன் ஒரு பகுதியாக கற்பிக்கப்பட்டது. பின்னர் உயிர் வேதியியல் பாடமானது, கால்நடை உடற்செயலியல் துறையுடன் இணைக்கப்பட்டு, கால்நடை உடற்செயலியல் மற்றும் உயிர் வேதியியல் துறையாக 2003 வரை செயல்பட்டு வந்தது. கால்நடை உயிர்வேதியியல் துறை, கால்நடை உடற்செயலியல் துறையிலிருந்து பிரிக்கப்பட்டு, 2004 முதல் தனித் துறையாக செயல்பட்டு வருகிறது.

குறிக்கோள்:

  • கால்நடை மருத்துவர்கள் அன்றாட சவால்களைச் சந்திக்கும் வகையில் நவீன கல்வித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கால்நடை உயிர் வேதியியலில் தரமான கல்வியை வழங்குதல்.
  • கால்நடைகளில் வளர்சிதை மாற்றக் கோளாறுகளைக் கட்டுப்படுத்துவதில், நோயறிதல் மற்றும் நவீன சிகிச்சைத் முறைகளை உருவாக்குதல்.
  • கால்நடைகளில் உறுப்பு செயலிழப்பைக் கட்டுப்படுத்துவதில் நோயறிதல் மற்றும் நவீன சிகிச்சைத் முறைகளை உருவாக்குதல்.
  • மேம்பட்ட நோயறிதல் சோதனை முறையினை பயன்படுத்தி, கால்நடைகளில் வளர்சிதை மாற்றக் கோளாறுகள் மற்றும் உறுப்பு செயலிழப்புகளை உறுதிப்படுத்துவது.

கல்வி:

பி.வி.எஸ்சி. &ஏ.எச் (இளநிலை பட்டப்படிப்பு) :

VCI விதிமுறைகள் 2016 இன் படி, கால்நடை உயிர்வேதியியல் பாடமானது, தற்போது இரண்டாமாண்டு பி.வி.எஸ்சி. & ஏ.எச். மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. மேலும் நான்காம் ஆண்டில் உயிர் வேதியியலின் மருத்துவ பயன்பாடுகள் என்ற பாடமும் கற்பிக்கப்படுகிறது (CCL, MVC இல் வழங்கப்படுகிறது).

இரண்டாமாண்டு பி.வி.எஸ்சி. & ஏ.எச். மாணவர்களுக்கு பின்வரும் பாடநெறி (ஆண்டு முறை) வழங்கப்படுகிறது.

  • கால்நடை உயிர்வேதியியல் - 2+1 (VCI- 2016 விதிமுறைகளின்படி)

கால்நடை உயிர் வேதியியலில் எம்.வி.எஸ்.சி. (முதுநிலை) பட்டப்படிப்பு :

கால்நடை உயிர்வேதியியல் எம்.வி.எஸ்.சி. (முதுநிலை பட்டப்படிப்பு) திட்டம் 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டம் இரண்டு செமஸ்டர் படிப்பு மற்றும் இரண்டு செமஸ்டர் ஆராய்ச்சி வேலை உட்பட நான்கு செமஸ்டர்களைக் கொண்டுள்ளது. ICAR PG பாடத்திட்டத்தின்படி பாடங்கள், முதல் இரண்டு செமஸ்டர்களில் வழங்கப்படுகின்றன:

முதுநிலை பட்டப்படிப்பில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி விபரங்கள் :

இத்துறையில் இருந்து 15 மாணவர்கள் கால்நடை உயிர்வேதியியலில் M.V.Sc. பட்டப்படிப்பை முடித்துள்ளனர். முதுகலை பட்டப்படிப்பு மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிப் பணிகளின் விவரம் :

  • நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த தாவர எண்ணெய்கள் உள்ளிட்ட தாவரப் பொருட்களைப் பயன்படுத்துதல்.
  • நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த நானோ கலவைகளைப் பயன்படுத்துதல்.
  • சூலரோட்டத்தில் இருக்கும் புற்றுநோய் செல்களை கொண்டு புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்காக தொழில்நுட்பம்.
  • இதயம் மற்றும் சிறுநீரகக் கோளாறுகளை கண்டறியும் குறிப்பான்களைக் கண்டறிதல்.

கால்நடை உயிர் வேதியியலில் - பிஎச்.டி. (முனைவர்) பட்டப்படிப்பு :

கால்நடை உயிர்வேதியியல் பிஎச்.டி. (முனைவர் பட்டப்படிப்பு) திட்டம் 2019 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. மேலும் பிஎச்.டி. திட்டம் இரண்டு செமஸ்டர் படிப்பு மற்றும் 6 முதல் 12 செமஸ்டர்கள் ஆராய்ச்சி வேலைகளைக் கொண்டுள்ளது. ICAR PG பாடத்திட்டத்தின்படி பாடங்கள், முதல் இரண்டு செமஸ்டர்களில் வழங்கப்படுகின்றன:

ஆராய்ச்சிக்களம்:

  • வளர்சிதை மாற்றக் கோளாறுகளைக் கட்டுப்படுத்துதல்
  • இதயம் மற்றும் சிறுநீரகக் கோளாறுகளில் வெளிப்படும் குறிப்பான்களைக் கண்டறிதல்
  • சிறுநீரகக் கோளாறுகளுக்கான சிகிச்சை முறைகளின் ஆய்வு.

வல்லுநர்கள்

  • சேஷ், பா. சே. லெ, பேராசிரியர் மற்றும் தலைவர்
  • சதீஷ்குமார், த., உதவிப் பேராசிரியர்
  • புவனா, ம., உதவிப் பேராசிரியர்

தொடர்புக்கு:

பேராசிரியர் மற்றும் தலைவர்,

கால்நடை உயிர்வேதியியல் துறை,

சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி,

வெப்பேரி, சென்னை – 600 007

தொலைபேசி: +91-44-25304000 விரிவாக்கம் 2091

மின்னஞ்சல் முகவரி: hodvbcmvc@tanuvas.org.in