கால்நடை நலக்கல்வி மையம்

கால்நடை நலக்கல்வி மைய இயக்ககம்

பல்கலைக்கழக உயிர்ப் பாதுகாப்புக் கால்நடை நோய் ஆய்வகம்

(உயிர்ப் பாதுகாப்பு ஆய்வகம் நிலை-3)


உயிர்ப் பாதுகாப்பு கால்நடை நோய் ஆய்வகம், மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் அதிகப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நோய்களைக் கண்டறிவதற்கும் காற்றினால் பரவக்கூடிய நோய்களைக் கண்டறிவதற்கும் பயன்படக்கூடிய ஓர் ஆய்வகம் ஆகும். இந்த ஆய்வகம் தேசியப் பால்வள மேம்பாட்டு வாரியத்தின் மேற்பார்வையில் தமிழ் நாடு புதுமைத் திட்ட நிதியுதவியுடன் ரூபாய் 12.75 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டது.


குறிக்கோள்

 • தீவிர நோய் உண்டாக்கும் தன்மையுடைய நச்சுயிரி மற்றும் நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்களைக் கண்டறிதல் மற்றும் ஆராய்ச்சி மேற்கொள்ளுதல்
 • ஒழுங்குமுறையிலான தர உறுதியளிப்புச் சேவைகள் அளித்தல்
 • உயிர்ப் பாதுகாப்பு நிலை, பயிற்சி மற்றும் அறிவுசார் மனித வள மேம்பாடு அளித்தல்
 • உயிர்ப் பாதுகாப்பு ஆய்வகம் நிலை-3 ஆனது பொதுவாகக் காற்றின் மூலமாக மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஏற்படும் நோய்களைக் கண்டறிவதற்கும் ஆய்வு செய்வதற்கும் பயன்படுகிறது.

ஆய்வகத்தில் கையாளக்கூடிய நச்சுயிரிகள் / நுண்ணுயிரிகள்

 • கோமாரி நோய் நச்சுயிரி
 • பறவைக் காய்ச்சல் நச்சுயிரி
 • வெறிநாய்க்கடி நச்சுயிரி
 • கன்று வீச்சு நோய் நுண்ணுயிரி
 • காச நோய் நுண்ணுயிரி
 • அடைப்பான் நுண்ணுயிரி

ஆய்வகப் பயனாளர்கள்

 • தேசிய ஆராய்ச்சி நிறுவனங்கள்
 • தடுப்பூசி தயாரிப்பாளர்கள்
 • தேசிய / பிற மாநிலத் தரக் கட்டுப்பாட்டு நிறுவனங்கள்
 • பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்

ஆய்வகப் பயன்பாட்டிற்கான வழிமுறைகள்

இந்த ஆய்வகத்தைப் பயன்படுத்த விரும்புவோர் தாம் ஈடுபட்டிருக்கும் ஆய்வின் தன்மை, காலம், ஆய்வில் பயன்படுத்தக்கூடிய நச்சுயிரி / நுண்ணுயிர் பற்றிய தகவல், பயன்படுத்தக்கூடிய சிறிய விலங்கினங்கள் மற்றும் பறவைகள் பற்றிய தகவல், மாதிரிகள் எடுக்கும் முறைகள் அடங்கிய தகவல்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு தொடர்புகொள்ளவும்.

தொடர்புக்கு:

இயக்குநர்,
கால்நடை நலக் கல்வி மைய இயக்ககம்,
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்,
மாதவரம் பால் பண்ணை, சென்னை – 600051.
தொலைபேசி: 044 – 25555151
மின்னஞ்சல்: bsl3lab@tanuvas.org.in