vcri

விரிவாக்கக் கல்வி இயக்குநரகம்

உழவர் பயிற்சி மையம், ஏனாத்தூர், காஞ்சிபுரம்


தோற்றம்

இந்த உழவர் பயிற்சி மையம் 04.01.1980 அன்று காட்டுப்பாக்கத்தில் தொடங்கப்பட்டது. பின்னர் 26.07.1999 அன்று காஞ்சிபுரம் அருகில் உள்ள ஏனாத்தூர் கிராமத்திற்கு மாற்றப்பட்டது.

குறிக்கோள்கள்

இரண்டு வித கால்நடை வளர்ப்பு சம்ந்தமான பயிற்சிகளை வழங்கி வருகிறது. ஒன்று, ஒவ்வொரு வியாழக்கிழமையும் மையத்திலேயே வெவ்வேறு கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு பற்றிய இலவச பயிற்சி மற்றும் ஒரு மாத கட்டண பயிற்சிகளை அளித்துக் கொண்டு வருகிறது. மற்றொன்று பண்ணையாளர்களின் கிராமங்களுக்கு சென்று விவசாயிகளுக்குத் தேவையான பயிற்சிகளை அளித்து வருகிறது.

சேவைகள்

  • கால்நடைகள் மற்றும் கோழிகள் வளர்ப்பிற்கான உள் வளாகப் பயிற்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்படுகின்றன. கறவைமாடு வளர்ப்பு, வெள்ளாடு வளர்ப்பு, செம்மறியாடு வார்ப்பு, பன்றி வளர்ப்பு, முயல் வளர்ப்பு, நாட்டுக் கோழி வளர்ப்பு, இறைச்சிக் கோழி வளர்ப்பு, காடை வளர்ப்பு, வான் கோழி வளர்ப்பு, கினியா கோழி வளர்ப்பு, பால் மற்றும் பால் பொருட்கள், தீவனப் புற்கள் மற்றும் தீவன மரங்கள் உற்பத்தி போன்ற பயிற்சி வகுப்புகளை ஒவ்வொரு வாரம் வியழக்கிழமை நடத்துகிறது.
  • மேலும், கால்நடை பற்றிய திறன் மேம்பாடு எனும் ஒரு மாத கட்டணப் பயிற்சியினை இளைஞர்களுக்கு வழங்கி வருகிறது.
  • உள் வளாகப் பயிற்சிகளை பண்ணையாளர்களுக்கு 4 வாட்ஸ் அப் குழுக்கள் மூலமாகவும், பத்திரிகை மூலமாகவும், கறவைமாடு வளர்ப்போர்கள் சங்கம், ஆடு வளர்ப்போர்கள் சங்கம், கோழி வளர்ப்போர்கள் சங்கம் மற்றும் முயல் வளர்ப்போர்கள் சங்கங்கள் மூலமாகவும் தெரியப்படுத்தப்படுகிறது
  • கால்நடைகள் மற்றும் கோழிகள் வளர்ப்பிற்கான ஆலோசனைகள் மற்றும் தகவல்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.
  • கால்நடைகள் மற்றும் கோழிகள் வளர்ப்பு பயிற்சி தேவைப்படுவோருக்கு வெளிவளாகப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
  • சான்றிதழுடன் கூடிய கால்நடைகள் மற்றும் கோழி வளர்ப்பிற்கான ஒரு மாத கட்டண சுயவேலைவாய்ப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
  • கால்நடைகள் மற்றும் கோழிகள் வளர்ப்பிற்கான வங்கித் திட்ட அறிக்கை கட்டண அடிப்படையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றது.
  • கிராம தத்தெடுப்பு மூலமாக, கால்நடைகள் மற்றும் கோழி வளர்ப்பு பயிற்சிகள் மற்றும் பிற விழிப்புணர்வு பயிற்சிகள் வாயிலாக அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படுகின்றது.
  • காஞ்சிபும் மற்றும் திருவள்ளூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையுடன் இணைந்து தமிழக அரசின் விலையில்லா மாடுகள், ஆடுகள் மற்றும் புறக்கடை வளர்ப்புக்கு கோழிகள் விவசாயகளுக்கு கொடுக்கப்படும் முன்பு, கால்நடை மற்றும் கோழிகளை எவ்வாறு தேர்வு செய்வது என்பது பற்றியும், பிறகு கால்நடைகள் மற்றும் கோழிகளை பண்ணையாளர்கள் வாங்கவும் மற்றும் அந்த கால்நடை மற்றும் கோழிகளை பராமரிக்கும் முறைகள் மற்றும் நோய் தடுப்புகள் பற்றியும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர்,
உழவர் பயிற்சி மையம், ஏனாத்தூர்,
காஞ்சிபும் – 631 561.
தொலைபேசி: +91-44-27264019
மின்னஞ்சல்: ftckancheepuram@tanuvas.org.in