கால்நடை நலக்கல்வி மைய இயக்ககம்

கால்நடை நலக்கல்வி மைய இயக்ககம்

கோழிகளுக்கான மரபுசார் மூலிகை மருத்துவ ஆராய்ச்சி மையம்


இந்தியாவில் கோழி வளர்ப்பு அதிகளவு கோழி இறைச்சி உற்பத்தியுடன் ஒரு முக்கிய தொழிலாக உருமாற்றம் பெற்றுள்ளது. இந்த நவீன கோழிப் பண்ணை துறையில், நுண்ணுயிரி, நச்சுயிரி, ஒட்டுண்ணிகள் மற்றும் வளர்சிதை மாற்ற நோய்கள் கடும் சவாலாக உள்ளது. இதனைக் கட்டுப்பட்டுத்தப் பயன்படுதத்தப்படும் எதிர் உயிரி மற்றும் செயற்கை மருந்துகள் முட்டை மற்றும் இறைச்சிப் பொருட்களில் எதிர் உயிரி எச்சமாகக் கலந்து நுண்ணுயிர் எதிர்ப்புகளை உருவாக்குகிறது. இது தொடர்ந்து பெரும் சவாலாக உள்ளதால் இதற்கு ஒரு மாற்றாக மரபுசார் மூலிகை மருத்துவ முறைகளைப் பயன்படுத்தி நுண்ணுயிர் எதிர்ப்புகளைக் குறைக்க ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.
நாமக்கல்லில் இயங்கி வரும் கோழிகளுக்கான மரபுசார் மூலிகை மருத்துவ ஆராய்ச்சி மையம், தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தின் உறுப்பு ஆhய்ச்சி மையமாக 25.02.2011–ல் துவங்கப்பெற்றது. கோழிகளுக்கான மரபுசார் மூலிகை மருத்துவ முறைகளை ஆவணப்படுத்துவது, அவற்றை அறிவியல்பூர்வமாக (உள் உயிரியல் மற்றும் செயற்கை முறையில்) ஊர்ஜிதப்படுத்துவது, இம்மருத்துவ முறைகளை பிரபலப்படுத்துவது, மூலிகைகளின் தரத்தை அறிய அவற்றின் மூல வேதிப் பொருட்களைப் பகுத்தாய்வது மற்றும் மூலிகை முதலுதவி மருத்துவ முறைகளில் விவசாயிகளுக்குப் பயிற்சி அளிப்பது போன்றவை இம்மையத்தின் குறிக்கோள்களாகும்.

குறிக்கோள்கள்

 • கோழிகளில் மரபுசார் மூலிகைகளின் பயன்பாடு ஆவணப்படுத்தப்படுத்துதல்.
 • தாவர இராசாயன பகுப்பாய்வு பரிசோதனை மற்றும் மூலிகைகளின் தரத்தை அறிய அவற்றின் மூல வேதிப் பொருட்களைப் பகுத்தாய்வது.
 • உள் உயிரியல் மற்றும் செயற்கை முறையில் மூலிகைகளின் பயன்பாடு குறித்து ஆய்வு.
 • கோழிகளின் நலம் மற்றும் உற்பத்தியில் மூலிகைகளின் பயன்பாடு குறித்து பண்ணைகளில் ஆய்வு.
 • கோழிப்பண்ணையாளர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்களுக்கு கோழிகளின் நலம் மற்றும் உற்பத்தி குறித்து பயிற்சி.
 • விவசாயிகள் நேரில் கண்டு தெரிந்துகொள்வதற்காக ஆய்வகத்தில் மூலிகை மாதிரித் தோட்டம் பராமரித்தல்.

உள்கட்டமைப்பு

 • இம்மையத்தில் உள்ள ஆய்வகதத்தில் தாவர இராசாயன பகுப்பாய்வு பரிசோதனை மற்றும் கோழிகளைத் தாக்கும் நுண்கிருமிகளுக்கு எதிரான நுண்ணுயிர் எதிர்ப்புத் திறன் பற்றிய பகுப்பாய்வு செய்யும் வசதிகள் உள்ளன.

முக்கிய கண்டுபிடிப்புகள்

 • இம்மையத்தின் மூலம் நாட்டுக் கோழி வளர்ப்பில் ஏற்படும் முக்கியமான நோய்களான வெள்ளைக் கழிச்சல் நோய், அம்மை நோய், அக மற்றும் புற ஒட்டுண்ணிகள் இரத்தக் கழிச்சல் நோய் போன்றவற்றிற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்க உதவும் மரபுவழி மூலிகை மருந்து கலவைகள் குறித்து விவசாயகிளுக்கு நேரடியாகவும் தொலைபேசி வாயிலாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
 • மரபுவழி மூலிகை மருந்து கலவைகள் குறித்த அச்சிடப்பட்ட மடிப்பிதழ்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
 • இம்மையத்தில் தாவர இராசாயன பகுப்பாய்வு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வசதியை இப்பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
 • கோழிகளில் ஏற்படும் வெள்ளைக் கழிச்சல் நோய்க்கு எதிரான மரபுவழி மூலிகை மருந்து கலவைகள் (வடிசாறு) தாவர இராசாயன பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது,
 • கோழிகளைத் தாக்கும் நுண்கிருமிகளுக்கு எதிரான நுண்ணுயிர் எதிர்ப்புத் திறன் பற்றிய பகுப்பாய்வு (சால்மோனெல்லா, கிளாஸ்டிரிடியம், ஈகோலை மற்றும் ஸ்டபைலோகாக்கஸ் நுண்கிருமிகள்) மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 • கோழிகளில் மரபுசார் மூலிகைகளின் பயன்பாடு ஆவணப்படுத்தப்படுகிறது.
 • விவசாயிகள் நேரில் கண்டு தெரிந்துகொள்வதற்காக மருத்துவ பயனுள்ள மூலிகைகள் மாதிரித் தோட்டம் பராமரிக்கப்பட்டு வருகிறது.

ஆராய்ச்சிகள்

 • தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைத் திட்டமான மரபுசார் மூலிகை மருத்துவம் வாயிலாக வெள்ளைக் கழிச்சல் நோய் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல் மேற்கொள்ளப்பட்டது.

தற்போதைய குறிக்கோள்

 • மரபுசார் மூலிகை மருத்துவதத்தின் மூலம் வெள்ளைக்கழிச்சல் நோயைக் கட்டுப்படுத்துதல்.
 • நாட்டுக்கோழிகளில் மூலிகைகளின் நோய் எதிர்ப்புத்திறன் பற்றி ஆய்வு.
 • உள் உயிரியல் மற்றும் செயற்கை முறையில் மூலிகைகளின் நுண்ணுயிர் எதிர்ப்புத் திறன் பற்றிய பகுப்பாய்வு.

விரிவாக்கம்

 • கோழிகளின் நலம் மற்றும் உற்பத்தியில் மூலிகைகளின் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
 • கோழிகளின் நலம் மற்றும் உற்பத்தியில் மூலிகைகளின் பயன்பாடு குறித்து குறுஞ்செய்திகள் வானொலியில் ஒலிபரப்பப்படுகிறது.
 • இம்மையத்தின் மூலம் நாட்டுக் கோழி வளர்ப்பில் ஏற்படும் முக்கியமான நோய்களான வெள்ளைக் கழிச்சல் நோய், அம்மை நோய், அக மற்றும் புற ஒட்டுண்ணிகள் இரத்தக் கழிச்சல் நோய் போன்றவற்றிற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கவும் உதவும் மரபுவழி மூலிகை மருந்து கலவைகள் குறித்து விவசாயகிளுக்கு நேரடியாகவும் தொலைபேசி வாயிலாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
 • மரபுவழி மூலிகை மருந்து கலவைகள் குறித்த அச்சிடப்பட்ட மடிப்பிதழ்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
 • கோழிகளின் நலம் மற்றும் உற்பத்தியில் மரபுசார் மூலிகை மருத்துவதத்தின் பயன்பாடு குறித்த ஆராய்ச்சிக் குறிப்புகள் கருத்தரங்குகளில் விளக்கப்படுகிறது.

பேராசிரியர் மற்றும் தலைவர்,
கோழிகளுக்கான மரபுசார் மூலிகை மருத்துவ ஆராய்ச்சி மையம்,
கால்நடை மருத்துவமனை வளாகம், நாமக்கல் - 637 001.
தொலைபேசி: +91-4286-266 226
மின்னஞ்சல்: evhrcp@tanuvas.org.in