vcri, salem

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், சேலம்

மாணவ-மாணவியர் விடுதி வசதிகள்

விடுதி வசதிகள்

50216.92 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள மாணவர் விடுதியில் 70 அறைகளில் 210 மாணவர்கள் தங்கலாம். 44662.61 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள மாணவியர் விடுதியில்105 அறைகளில் 210 மாணவியர் தங்கலாம். இரண்டு விடுதிகளும் நவீன சமையலறை மற்றும் மெஸ், நோயாளர் அறை, துணைக் காப்பாளர் அறை, பார்வையாளர்கள் (பெற்றோர்கள்) அறையுடன் உள்ளன. மாணவர் மற்றும் மாணவியர் விடுதிகளில் சுகாதாரமான குடிநீர் ஆர்.ஓ. மூலம் வழங்கப்படுகிறது.